ஆலயத்தின் தூயவர் --- தூய சவேரியார்
கத்தோலிக்க மக்கள் --- திருத்தலம் ஆகவே இங்கேயே தங்கியிருப்போர் சுமர் 25 பேர்
மறை வரலாறு
இனறைய சந்தைப் பேட்டைப் பகுதியில் பெரும்பாலும் இசுலாமியர்கள் தான் வாழ்கிறார்கள். முந்தைய காலத்தில் இங்கு கிறித்தவர்களும் வாழ்ந்துள்ளனர். ஆனால் கிறித்தவர்கள் தாமிரபரணி அற்றிற்கு மிக அருகில் வாழ்ந்திருக்க வேண்டும். இப்போது சந்தைப்பேட்டையில் அந்த இடத்தில் தூய சவேரியார் கோவில் மட்டும் இருக்கிறது. அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கிறித்தவர்கள் இங்கிருந்து இடம் பெயர்நது கழியாவூர் மற்றும் செய்துங்கநல்லூர் போன்ற இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். கோவில் இடிந்து, சிதைந்து, உருகுலைந்து இருந்தாலும் இடம் பெயர்;;ந்த கிறித்தவர்கள் இன்றும் இந்த கோவிலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கின்றனர். இதனைக் கண்ட பணி. லூர்துராசு தனிக்கவனம் செலுத்தி தலைவெள்ளி தோறும் முற்பகலில் திருப்பலி நடக்க ஏற்பாடு செய்தார்.
பின்னர் பணி. அல்போன்சு, பாளை மர வியாபாரிகளின் உதவியோடு இக்கோவிலை அழகுற புதிப்பித்தார். அதிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் முற்பகலில் திருப்பலி நடக்கிறது. இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்காக அன்மையில் ஒர திருப்பயணிகள் தங்குமிடம் அதே பாளை மர வியாபாரிகளின் தாராள பண உதவியோடு கட்டப்பட்டு பாளை ஆயர் சூடு பால்ராசு அவர்களால் 09.10.2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்து இட்ம் பெயர்ந்து சென்னையில் வாழும் திரு, டி ரோசு அவர்கள் மட்டு;ம் உரூ. 2 இலட்சங்கள் தந்து ஊக்குவித்தார். இப்போது இங்க தங்கியிருக்கும் நோயாளிகளின் தங்குமிடப் பிரச்சினை நீங்கி நிம்மதியாக தூயவரின் அருளுக்காய் காத்திருக்கிறார்கள்.
அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.