தென்னகத்துப் பதுவை என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் புனிதரின் வள்ளன்மையினால் நடைபெறும் புதுமைகள் ஏராளம் ! ஏராளம்! ஆலயம் நாடி வருவோரின் மனக்குறை மாறுகிறது.. உடற்குறை தீருகிறது. ஊமைகள் பேசுகின்றனர்! முடமானோர் முடம் நீங்கி முழுமை வடிவம் பெற்றுள்ளனர். கண்ணில்லார் கண் ஒளி பெற்ற எண்ணில்லாப் புதுமைகள் எழுதிட ஏடுகள் ஆயிரம் வேண்டும். குழந்தை வரம் வேண்டி வந்தோர் குறை நீங்கி குதூகலம் பெறுகின்றனர். தீய ஆவியின் ஆளுகையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். களவு போன பொருட்களும். கவனக் குறைவால் இழந்துவிட்ட பொருட்களும் புனிதரின் புதுமையால் திரும்பக் கிடைக்கின்றன. வேலையின்மையால் வேதனையுறும் இளைஞர்களின் வாழ்வில் வசந்தம் தவழ்ந்திட வரம் நல்குகிறார் புனிதர். வியாபாரம், தேர்வு, அரசியல் இவைகளில் வெற்றியா? வாரி வழங்குகிறார் வள்ளல் அந்தோனியார். பசிக்கு விருந்தாக, நோய்க்கு மருந்தாக வாழ்வளிக்கும் வள்ளலின் திருத்தலத்தில் நடைபெற்ற ஆதாரம் நிறைந்த புதுமைகளில் .... இதோ.... சில....
1. மாட்டை குணமாக்கிய் மகத்துவம்
அந்நாட்களில் திசையன்விளை பகுதியைச் சார்ந்தவர்கள் கருப்புக்கட்டிகளை பொதிமாடு மூலம் விருதுநகர், சிவகாசி பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதுண்டு. அவ்வாறு செல்பவர்கள், புளியம்பட்டி வழியாகவே செல்வார்கள். பந்தல் அமைத்து விளக்கேற்றி புனிதருக்கு ஆலயம் கட்ட நாள் செய்த அன்று அவ்வாற பொதி ஏற்றிச் சென்ற மாடு ஒன்று ரத்த பேதி ஏற்பட்டு படுத்துவிட்டது. எவ்வளவு வைத்தியம் செய்தும் மாட்டை எழுப்ப முடியவில்லை. பொதி ஏற்றி வந்தவர்கள் புளியம்பட்டி கோவிலில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கின் எண்ணையை எடுத்து அரைத்து அந்தோனியாரை நினைத்துக் கொண்டு மாட்டிற்குக் கொடுத்தனர். எல்லோரும் அதிசயிக்கும்வண்ணம் பேதி நின்று மாடு எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டது. மகிழ்வுற்ற வியாபாரிகள் அந்தோனியாருக்கு நன்றிக் கடன் செலுத்தி வியாபாரத்திற்குப் புறப்பட்ட சென்றார்கள்.
2. காய்ந்த மரம் காய்த்தது
செங்கோட்டைச் சேர்ந்தவர் திரு. வி. குமரேசன். இவரது இல்லத்திலுள்ள தென்னை மரம் நோயால் பாதிக்கப்பட்டு குருத்து ஓலை வலை காய்ந்து விட்டது. காய்ந்த குருத்தினை சிறுவர்கள் பிய்த்து எறிந்து விட்டனர். இனி மரம் பட்டு விடும் என்று அனைவருமே கூறிவிட்டனர். ஆனால் திரு. குமரேசன் நம்பிக்ககையுடன் புளியம்பட்டி சென்று கோவிலை வணங்கி பின் கோவில் அருகேயுள்ள வேப்ப மரத்திலிருந்து கொஞ்சம் இலைகளை பறித்துக்கொண்டு ஊர் வந்தார். தினந்தோறும் அந்த இலைகளை அரைத்து தென்னை மரத்தில் சிலுவை அடையாளம் வரைந்து வந்தார். புனிதரின் ஆற்றலால் நாளடைவில் புதிய குருத்து உருவாகி மரம் வளர்ந்தது. ஏராளமான காய்களும் காய்த்தது. இன்னும் அந்தத் தென்னை மரம் பலன் தந்து கொண்டிருக்கிறது.
3. குழந்தை பிறந்தது... குடும்பம் மகிழ்ந்தது
திரு. குமரேசன் - மதுரம் செங்கோட்டை தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. பத்தாண்டு காலமாகப் பல்வேறு மருத்துவங்கள் செய்தும் பலன் இல்லை. இதனால் திருமதி. மதுரம் மன நோயால் பீடிக்கப்பட்டவரானார். தம்பதியர்கள் புளியம்பட்டி திருத்தலம் வந்தனர். அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டது. மனநோய் குணம் ஆனதுடன் குழந்தைப்பேறும் கிடைத்தது. பிறந்;த குழந்தைக்குப் பெற்றோர் அந்தோனி ராம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் திருத்தலம் வந்து நன்றி செலுத்தி மகிழ்கின்றனர்.
4. மழலைச் செல்வமற்றோர் மனம் மகிழ மகவு ஈந்தவர்
தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரின் கண் தேவர் கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி வருபவர் திருஇ வைரவன் என்ற ஜெகநாதன். இவரது சொந்த ஊர் இராஜபாளையம். 1954ம் ஆண்டு திருமணமான அவருக்கு ஆண்டுகள் பல சென்றும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவர்களை நாடினார். அம்பை டாக்டர் லட்சுமி அம்மாள் ஆ.டீ.டீ.ளு., சங்கரன்கோவில் டாக்டர் பு~;பநாதன் ஆ.டீ.டீ.ளு., கோவில்பட்டி டாக்டர் ராகவன் ஆ.டீ.டீ.ளு.. ஆகியோர் இத்தம்பதிகளை பரிசோதித்து குழந்தை பிறக்காது எனக் கூறிவிட்டனர். மனந்தளராத திரு. ஜெகநாதன் தம்பதிகள் நாகர்கோவில். திருச்சி. கரூர் ஆகிய இடங்களில் உள்ள புகழுறு மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் கூறிய ஒரே பதில் “உங்களுக்கு குழந்தை பிறக்காது” என்பதே. மழலைச் செல்வமற்றோர் மனம் மகிழ மகவு ஈந்திடும் புனித அந்தோனியாரின் மாண்பினைச் செவியுற்ற திரு. ஜெகநாதன் 1971 ஆடிக் கடைசி செவ்வாயன்று புனித அந்தோனியாரை வேண்டி பிறக்கும் குழந்தைக்கு “அந்தோனிப்பிச்சை” எனப் பெயர் வைப்வேன் என வேண்டுதல் செய்தார். வேண்டுதலின் பின்னர் அவரது மனைவி கருவுற்று 1972 கார்த்திகை 27ம் தேதி அன்று காலை குழந்தை பிறந்தது. மணமாகி 18 ஆண்டுகள் கழிந்த பின் பிறந்த குழந்தைக்கு “அந்தோணிப்பிச்சை” எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.
5. விழுங்கிய ஊசி வெளிவந்தது
தூத்துக்குடியில் வாழும் திரு. தனிஸ் மச்சாது அவர்களின் தவப்புதல்வன் ஊசி ஒன்றை வைத்து வாயில் போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். ஆனால் விளையாட்டு விபரீதமாயிற்று. ஊசி வாயினுட் சென்று வயிற்றினுள் புகுந்துவிட்டது. சிறுவனின் பெற்றோர் துடியாய் துடித்தனர். அவர்கள் அடிக்கடி புனிதப் பயணம் வரும் புளியம்பட்டியில் கோவில் கொண்டெழுந்தருளியிருக்கும் புனித அந்தோனியாரை நம்பிக்கையுடன் மன்றாடினர். வியப்புறும் வண்ணம் பையன் விழங்கிய ஊசி வெளிவந்தது. பெற்றோர் மகிழ்வுற்றனர். புனித அந்தோனியாருக்கு நன்றி கூறினர். தாங்களடைந்த இப்பெரு நன்மையினை அச்சிட்டு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு இத்திருத்தலத்தில் வழங்கினர்.
6. கால் நொறுங்கியவர் மீது கருணை கொண்டார் இறைவன்
சாத்தூரைச் சார்ந்த கபிரியேல் என்பாரின் மகன் மு. ஜார்ஜ் . இவர் தொழிற்சாலையில் போர்மேகனாகப் பணிபுரிந்தார். 1959ல்; 41 வயது நடக்கும்போது சைக்கிளிலிருந்து கீழே விழுந்து முழங்கால் நொறுங்கி விட்டது. நடக்க முடியாதவரானார். மதுரை மாநகரின் சிறந்த மருத்துவரான டாக்டர் வடமலையானிடம் சென்று சிகிச்சை பெற்றார். விருதுநகர் டாக்டர் லைசாண்டர் ஆ.டீ.டீ.ளு. அவர்கள் சிகிச்சையளித்தும் பயனேற்படாமற் போகவே, சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். கம்பு ஊன்றி நடக்கும் வரமருள இறைவனடியே தஞ்சம் என புளியம்பட்டி வந்தார். புனித அந்தோனியாரின் திருத்தலம் தங்கி அழுது மன்றாடி 41 நாட்கள் கழித்தார். தானாக நடக்கும் அளவுக்கு குணம் பெற்றார். இப்போது தன் பணியை தங்கு தடையின்றி செய்யும் அளவுக்கு நலமுடன் இருக்கிறார். புனிதரை நம்பினோர் கைவிடப்படார்.
7. முடமான குழந்தை நடந்தது
தூத்துக்குடி பெரியகடைத் தெருவில் வாழும் திரு.அந்தோனி சேவியர், அல்போன்சம்மாள் தம்பதியரின் 3 வயது பெண் குழந்தை நடக்க இயலாமல் இருக்கக் கண்டு பெற்றோர் உற்ற துன்பத்திற்கு அளNவு இல்லை. புனித அந்தோனியாரை நம்பினார். அவருடைய பாதத்தினை சரணடைந்தார். ஆதவன் முன் பனி விலகுவது போல அவர்கள் மனத்துயரை நீக்கியருளினார் புனிதர். குழந்தை தன் சிறு கால்களை ஊன்றி நடந்து பெற்றோரைப் பெரு மகிழ்வுக்கு உள்ளாக்கிற்று. நம் மனக்குறை நீங்க, துன்பம் அகல, ஆறுதல் பெற புனித அந்தோனியாரின் திருப்பாதங்களைத் தஞ்சம் என அடைவோம்.
8. மருத்துவர்களால் கைவிடப்பட்ட சிறுமி அற்புதமாய் குணமடைந்தாள்
கழுகுமலை பழங்கோட்டை குழந்தையம்மாளின் புhல்வி அந்தோனியம்மாளுக்கு திடீரென்று காய்ச்சல் கண்டது. பதின்மூன்று வயது நிரம்பிய அச்சிறுமி படும் துன்பம் கண்டு, அவளது பெற்றோர் கோவில்பட்டி டாக்டர் சென்னகேசன் என்பவரிடம் கொண்டு சென்றனர். டாக்டர் ஒரு மாதம் அளவாக சிகிக்சை அளித்தும் குணம் ஏற்படாதது கண்டு சிறுமியை மதுரை அரசினர் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்;;லுமாறு ஆலோசனை வழங்கினார். சிறுமியின் பெற்றோர் மதுரை மாநகரின் புகழ் பெற்ற டாக்டர் ராஜேந்திரன் அவர்களிடம் கொண்டு சென்று சிகிச்சையளிக்குமாறு வேண்டினர். அவரும் சிறுமிக்கு சிகிச்சை அளித்தார். பிள்ளை நடக்கக்கூட சக்தியிழந்து விட்டது. கை, கால் செயலற்று வி;;ட்டது. பேசவும் இயலவில்லை. டியூப் மூலம் குளுக்கோஸ் உணவும், ஆரஞ்சுப் பழச்சாறும் அளிக்கப்பட்டது. ஒரு மாதம் மருத்துவம் செய்து பிள்ளையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணாத டாக்டர் ராஜேந்திரனும் கையை விரித்தார். குழந்தையின் தாய் கடைசியாக நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் புளியம்பட்டி புனித அந்தோனியார் பாதத்தை அடைவது என எண்ணி 8.2.1973 அன்று தாயும் சேயும் நாரைக்கிணறு புகை வண்டி நிலையத்தை அடைந்தனர். மிகவும் பலவீனமுள்ள அக்குழந்தையை மாட்டு வண்டியில் கொண்டு சென்றால் வழியிலேயே இறந்து விடுமோ என அஞ்சிய அத்தாய் தான்பெற்ற அக்குழந்தையை தன் தோளில் சுமந்து கொண்டே புளியம்பட்டி வந்து சேர்ந்து புனித அந்தோனியாரின் பாதத்திலே கிடத்தினார். என்ன ஆச்சரியம்! புளியம்பட்டி புனி;த அந்தோனியாரின் திருத்தலத்தை அடைந்த அன்றே அக்குழந்தை சிறிது இட்லியை உண்ண ஆரம்பித்தாள். ஒரு வாரத்தில் ஒரளவு குணம் கிடைத்தது. 41 நாட்களில் பூரண சுகத்துடன் நடமாட ஆரம்பித்தாள். குணம் அளித்த புனிதருக்கு நன்றி செலுத்த மாதம் ஒருமுறை தாயும், குழந்தையும் இத்திருத்தலம் வந்து செல்லுகின்றனர். நாமும் புனித அந்தோனியாரிடம் நம்பிக்கையுடன் செல்லுவோம்.
9. புதுமைக் கிணற்றிலும் புதுமைகள்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்..... வைகாசி மாதத்தின் ஒரு வைகறைப் பொழுது, புளியம்பட்டி வாழ் திரு. காசி நாடார் என்பவர் நாழிக்கிணறு போல் சிறுத்திருந்த புதுமைக் கிணற்றில் கமலை இறைத்துக் கொண்டிருந்தார். கமலைத் தண்ணீரில் ஊத்துமலையிலிருந்து வந்திருந்த சில திருப்பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென..... மாடு .... கலைந்து...... முன்னும் பின்னும் இழுத்து.... ஓரு மாடு கிணற்றுக்குள்Nளு விழுந்து விட்டது. கூடவே.... குளித்துக்கொண்டிருந்த ஒரு தாயும் மகளும் மாட்டோடு கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்தனர். புனிதரின் அருங்குறி அங்கே... நிழலிட... கிணற்றுக்குள் விழுந்த மாடும் மற்றும் தாய், மகள் ஆகிய இருவரும் எவ்வித சிறு காயமுமின்றி மீட்கப்படுகின்றனர். சில காலம் கழித்து அதே காசி கமலை இறைத்துக் கொண்டிருந்தார். தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த ஒரு யாத்திரிகர் தண்ணீர் வாளியைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார். உடன் வந்த கனத்த சரீரமுடைய ஒருவர் தனது ஊமை மனைவியிடம் உடைகளைக் களைந்து கொடுத்துவிட்டு, காசி உதவியுடன் கமலைக் கயிறு வழியாகக் கிணற்றுக்குள் இறங்கினார். திடீரென்று கமலை இறைக்கும் பட்டறைப் பலகையுடன் கமலைக் கல்லும் உடைய கயிறு வழியாக கிணற்றுக்குள் இறங்கிய மனிதரும் மேலே இருந்து உதவிய காசி கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்! இருவருக்கும் சிறிது காயம்கூட ஏற்படவில்லை. அதை விட ஆச்சரியம்.......!! தனது கணவர் கிணற்றுக்குள் விழுவதைக் கண்டு கூச்சலிட முற்பட அந்தப் ஊமைப் பெண் ....... காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள் என்று பேசவே ஆரம்பித்துவிட்டாள்.