கல்லத்திக்கிணறு

Home >  sub stations of Puliampatti Parish >  Kallathi Kinaru Substations

St.antony-s shrine

புளியம்பட்டி, தூய அந்தோணியார் திருத்தலத்தின் இருப்பிடம் மட்டும் அன்று. புளியம்பட்டி எட்டு துணை பங்குத் தளங்களை கொண்டு ஒரு பெரிய பங்காகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருத்தலத்தின் அதிபர் தந்தையவர்களே இபங்கின் பங்குப் பணியாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

1954 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளில் மதுரை மறை மாநிலப் பேராயர் மேதகு சே. பி;. லெயோனார்டு ஆண்டகை அவர்களால் புளியம்பட்டி புதிய பங்காக அறிவிக்கப் பட்ட போது அதோடு இணைந்திருந்த கிளை பங்குகள்: அலவந்தான் பங்கிலிருந்து அணைத்தலையூர், புங்கனூர், ரசபதி, துறையூர், மடத்துப்பட்டி, கைலாசப்புரம் இவற்றோடு பாளையங்கோட்டைப் பங்கைச் சார்ந்த குப்பக்குறிச்சி, சீவலப்பேரி, பொட்டல் பச்சேரி ஆகிய ஊர்களும் சேர்ந்தன. 1983இல் பேட்டைப் பங்கிலிருந்து சங்கர் நகர் பிரிந்த போது துறையூர், அணைத்தலையூர் மற்றும் ரசபதி ஆகிய மூன்று ஊர்களும் சங்கர் நகர்ப் பங்கோடு இணைந்தன. 1987 இல் தொலைவு, போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக கயத்தார் பங்கோடு இருந்த கல்லத்திக்கிணறு புளியம்பட்டிப் பங்கோடு இணைந்தது. மக்களே இல்லாத சந்தைப் பேட்டையிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

கோவில் இல்லாத ஒட்டுடன்பட்டி, சவலாப்பேரி, கீழக்கோட்டை மருதன் வாழ்வு, நாரைக்கிணறு, பரிவில்லிக்கோட்டை, கொடியங்குளம் போன்ற ஊர்களிலும் சில கிறித்தவக் குடும்பங்குள் இருக்கின்றன. இந்த ஊர்களில் மொத்தமாக ஏறத்தாழ எழுபது கத்தோலிக்க கிறித்தவர்கள் வாழ்கின்றனர்.

புளியம்பட்டியின் கிளை பங்குகளான இவ்வூர் கத்தோலிக்க கிறித்வர்கள் 98மூ பேர் தலித்துக்கள். தாங்கள் கிறித்தவர்களாய் இருப்பதாலேய இந்திய அரசியலமைப்பு கூரும் அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வை இழந்தாலும் கிறித்துவை இழக்க மாட்டேன் என்ற பவுலடியாரின் நம்பிக்கையே அடித்தளம்.

ஆலயத்தின் தூயவர் - தூய சவேரியார்
கத்தோலிக்க மக்கள் - 543

மறை வரலாறு

ஒரு காலத்தில் இந்த ஊரின் நடுவே ஒரு கிணறும் ஒரு கல் அத்திமரமும் இருந்திருக்கிறது. இந்த இடத்தில் தான் பஞ்சாயத்து, வரி தீர்வை மற்றும் ஊர் கூட்டம் போன்ற முகாமையான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதை வைத்தே இவ்வூர் கல்லத்திக்கிணறு என்று பெயர் பெற்றிருக்கிறது. இவ்வூர் மக்கள் பூர்வீக கிறத்தவர்கள்.

பன்னீர்குளம் பங்கின் கிளை பங்காக இவ்வூர் இருந்த போது அருள்பணி, தெலிங்கர் காலத்தில் ஏற்கெனவே இருந்த ஓலைக் கூரைக் கோவிலை மாற்றி ஓடு வேங்ந்த கல்லால் ஆன புதிய கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். பங்கு பன்னீர்குளத்திலிருந்து கயத்தாறு ஆன போது, கல்லத்திக்கிணறு கயத்தாறு பங்கிற்கு மாற்றப்பட்டது. 1987 இல் தொலைவு, போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக கயத்தார் பங்கோடு இருந்த கல்லத்திக்கிணறு புளியம்பட்டிப் பங்கோடு இணைந்தது. பணி. ஞானப்பிரகாசம் பணி காலத்தில் கோவிலை விரிவுபடுத்தி ஆயர் இருதயராசு அவர்களால் வழிபாட்டிற்கு அருள்பொழிவு செய்திருக்கிறார்கள்.

கோவில் தெருவின் முதற்றில் தங்கள் சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் மாதா கெபி ஒன்றை கட்டி மேதகு ஆயர் இருதயராசு அவர்களால் அர்ச்சித்தார்கள். அருள்பணி. ஞானப்பிரகாசம் அவர்கள் அழைக்க, 1992 ஆம் ஆண்டில் மே மாதம் 31ஆம் நாளிலிருந்து தங்களது இறைமனித விழுமிய பணிகளை தூய ஆன்னி லூசர்ன் சகோதரிகள இவ்வூரில் செய்த வருகின்றனர். இரு அருள் அன்னையர் திருத்தலத்தின் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாகவும், ஒரு சகோதரி திருத்தல காணிக்கை பணத்தை வைத்தே கட்டிய மருந்தகத்தில் செவிலியராகவும் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் உடனிருப்பு மிகவும் பின் தங்;கிய கிராமமான கல்லத்திக்கிணற்றில் உள்ள சிறுவர் சிறுமியரின் முழு மனித வளர்ச்சிக்கு ஊன்று கோலாகவும், அற்றலாகவும் இருக்கின்றது என்பது பாராட்டுதற்குரியது.

05.05.2002 இல் தூய சவேரியார் கோவிலில் மண்ணின் மைந்தர் அருள்பணி. அருள்ராசு அவர்கள் அகமதாபாத் மறைமாவட்டத்திற்காக அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார் மேலும் அருள் அன்னை குழந்தை திரேசா, அருள் அன்னை லூர்து அந்தோணி, அருள் அன்னை செல்வி, அருள் அன்னை. செல்வி, அருள் அன்னை. வசந்தா, அருள் அன்னை. மரியா ஆகியோரை இறை மனித விழுமியப் பணிகளை செய்வதற்கு கல்லத்திக்கிணறு அர்பணித்திருக்கின்றது.

அன்பியங்கள்

  • தூய குழந்தை திரேசா அன்பியம்
  • தூய குழந்தை இயேசு அன்பியம்
  • தூய சவேரியார் அன்பியம்
  • தூய பரலோக அன்னை அன்பியம்
  • தூய மிக்கேல் அதிதூதர் அன்பியம்
  • தூய செபசுதியார் அன்பியம்
  • தூய யோசேப்பு அன்பியம்
  • தூய அல்போன்சா அன்பியம்.

அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.