புளியம்பட்டி திருத்தலம்

Home >  Events at puliampatti anthony shrine >  A Message From Shrines Rector

புளியம்பட்டி சுற்றுலாத் தளம் இல்லை. தொழில் நகரம் இல்லை. இங்கு வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை. வங்கிகள் இல்லை. பொழுது போக்கு வசதிகள் இல்லை. சில சமயங்களில் போக்கவரத்துக்கு கூட வழி இல்லை. இது வானம் பார்த்த பூமி. வானம் பொழிந்தால் மட்டுமே மண் விளையும். எல்லா நிலையிலும் பின் தங்கியதுதான் புளியம்பட்டி, வெளிப்புற ஈர்ப்புகளுக்கான எந்த அடையாளங்களும் இல்லாத அநத ஊருக்கு இலட்சக்கணக்கான மக்கள் தேடி வருவதுதான் அனைவரின் வியப்பு! இது எப்படி சாத்தியம்? அந்த அற்புதத்தைதான் தூய அந்தோனியார் செய்து வருகிறார்.

புளியம்பட்டி ஊரைச் சுற்றி ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சமூகத்தில் பறக்கணிக்கப்பட்ட மக்கள் தான் வாழ்கிறார்கள். புளியம்பட்டி “ஆண்டவர் இத்தகையோர் மத்தியில்தான் குடி கொள்வார்” (திருப்பாடல் 9.9) என்ற விவிலிய உண்மைக்கு புளியம்பட்டி ஓர் பெரிய சான்று. புளியம்பட்டி புதுமை விளையும் பூமி. ஒவ்வொரு நாளும் கோடி அற்புதர் புதுமை செய்கிறார். புதுமைப் புனிதர் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகிறார். ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்து வரும் மக்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் திரும்புகிறார்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகள், உடலால், உள்ளத்தால் நலிந்தவர்கள் திருத்தலத்தில் பல நாட்கள் ஏன் பல மாதங்கள் தங்கி நம்பிக்கையோடு செபித்து, கோடி அற்புதரின் பரிந்துரையால் நலிவு நீங்கி, உடல் மன நலம் பெற்றுச் செல்லும் காட்சியைக் காணக் கோடிக் கண்கள் வேண்டும்


திருத்தலத்திற்கு வாருங்கள்!
நம்புங்கள் செபியுங்கள்!
நல்லது நடக்கும்!