எல்லோரும் கல்வி என்பது மட்டுமல்ல. குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு அதற்கான வசதி என்பதில் கத்தோலிக்கத் திருச்சபை தனிக்கவனம் செலுத்துவது புதிதல்ல.
அந்த அடிப்படையில் ஏழை மாணவர்கள் கல்வி பெற ஏற்ற சூழ்நிலையை உருவாக்க 1963ம் ஆண்டில் திருத்தலப் பொறுப்பாளராய் இருந்த அருட்திரு. அருளானந்தம் அடிகளார் புனித அந்தோனியார் சிறார் காப்பகம் ஒன்றை உருவாக்கினார். ஏறத்தாழ 100 மாணவர்கள் கருணை இல்லத்தில் சேர்ந்து பயில வசதி செய்தார். இங்கு பயின்ற பலர் இன்று பலதுறைகளில் சிறப்புடன் பணியாற்றுகிறார்கள் என்பது திருத்தலத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
ஆண்கள் மட்டுமே பயின்று வந்த கருணை இல்லத்தில் கருணை இல்லத்தில் பெண்கள் பிரிவு ஒன்று 2000 ஜீன் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அருட்திரு. லூர்துராஜ் அவர்களால் உருவானது. தற்சமயம் 50 சிறார்களும் 18 சிறுமிகளும் கருணை இல்லத்தில் இருக்கிறார்கள். சிறுமிகள் புனித சார்லஸ் சபை சகோதரிகளின் கண்காணிப்பில் பதுவா முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கிறார்கள். தாசில்தார் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்ற நிபந்தனை தவிர, அவர்கள் எட்டாம் வகுப்பு வரை படிக்க திருத்தலமே எல்லா உதவிகளையம் இலவசமாக செய்கிறது. புளியம்பட்டி ஆர். சி. நடுநிலைப் பள்ளிக்கு ஆதாரமாக இருப்பது இக்கருணை இல்லம்.
படிப்பு மட்டுமன்றி மாணவர்களின் ஒழுக்கமான வாழ்வுக்கு தேவையான அனைத்து அடிப்படை ஒழுக்க நெறிகளும் கற்றுத்தரப்பட்டு செயல்படுத்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக திருவள்ளுவர் இலக்கிய மன்றம் செயல்படுகிறது. மாதம் இருமுறை இம்மன்றத்தில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எல்லா மாணவர்களும் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான முயற்சி எடுக்ப்படுகிறது. மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் இசைபயிற்சியும், ஆங்கில இலக்கண வகுப்பும், சிலப்பாட்ட மற்றும் கிராமிய கலைகள் அனைத்தும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வமுடன் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்று தங்களின் தனித்திறமைகளை வளர்ப்பதில் மும்முரமாக செயல்படுகின்றனர்.
மிகவும் கஷ்டப்பட்ட தாய் தந்தையின்றி பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.