கீ. கைலாசப்புரம்

Home >  Kailasapuram Substation

St.antonys shrine

ஆலயத்தின் தூயவர் --- புனித செபமாலை அன்னை
கத்தோலிக்க மக்கள் --- 639

மறை வரலாறு

மன்னராட்சிக் காலத்தில் கீழக்கோட்டை கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் இது கீ. கைலாசப்புரம் என்று அழைக்கப்படுகிறது. கங்கை கொண்டானில் வசித்த பிராமணர்களுக்குச் சொந்தமான இந்த நிலப்பகுதிகளில் கூலி விவசாயிகளாக இவ்வூர் மக்கள் வாழ்க்கையைத தொடங்கினர். வத்திராயிருப்பைச் சேர்ந்த தேவப் பாக்கியம் குடும்பத்தினரே முதலில் குடியேறியவர்கள். இங்குள்ள மக்கள் தொடக்கத்தில் இருந்தே கத்தோலிக்க கிறித்தவர்கள். இடைக்காலத்தில் தோன்றிய கருத்து வேறுபாடுகளின் காரணமாக பிற கிறித்தவ சமூகங்கள் தோன்றின. பிற கிறித்தவ சமூகத்தின் ஊடுறுவல் மத்தியிலும் இம்மக்கள் கத்தோலிக்க மரபுகளையும், நம்பிக்கையையும் காத்துவருகின்றனர்.

தொடக்கத்தில் குடிசைக் கோவிலில் செபமாலை அன்னையை வைத்து வழிபட்ட மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னே இப்போதுள்ள உறுதி குலையாத கோவிலை சொந்த முயற்சியாலேயே கட்டி எழுப்பியிருக்கிறார்கள்.

வளாகத்தின் வாசல் ஒரத்தில் கோவிலக்கு முன்னே லூர்து மாதா கெபி ஒன்ற உள்ளது. அருள்பணி. சந்தியாகு பணிக் காலத்தில் திரு. மணிராசு, அன்னமணி மோசசு என்பவர் நினைவாக 12.05.1991 இல் கட்டிக் கொடுத்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.

இவ்வூரில் உரோ.கத். நடுநிலைப்பள்ளி ஒன்று சிறப்பாக இயங்கி வருகின்றது.

அன்பியங்கள் கைலாசபுரம்

  •     அருள்பணி. இருதயராசு
  •     ஆருள் அன்னை சேவியர்


அருள்பணி. ஞானப்பிரகாசம் அந்தோணி செல்வன் ஆகியோரை இறை மனித விழுமியப் பணிகளை செய்வதற்கு அர்பணித்திருக்கின்றது.

அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.