ஆலயத்தின் தூயவர் தூய மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க மக்கள் 451
மறை வரலாறு
சீவலப்பேரியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றினால் வளம் பெற்றது. இந்த நிலங்களில் உழைக்க திருவைகுண்டம், செழியநல்லூர்; கடம்பூர் போன்ற ஊர்களிலிருந்து வரவழைக்கப்பட்டு குடியமர்தப்பட்டவர்களே இவ்வூர் மக்கள். அதனால் பொட்டல் பச்சேரி என்ற பெயர் பெற்றது. இவர்களது கத்தோலிக்க விசவாசம் நீண்ட காலத்தைக் கொண்டது. 1901 லேயே மண் சுவரால் தூய மிக்கேல் அதிதூதருக்கு கோவில் கட்டி வணங்கியிருக்கின்றனர். 1964 இல் புளியம்பட்டி பங்கு அருள்பணி. அருளானந்தம் முயற்சியில் புதிய கோவிலை கட்டியிருக்கிறார்கள்.
இப்பகுதியின் மண் தன்மையால் கோவில் சிதைவுற்றது. 1998 இல் பணி. லூர்துராசுவின் முயற்சியில் இப்போதைய கோவிலைக் கட்டி மேதகு ஆயர் இருதயராச அவாகளால் வழிபாட்டிற்கு அருள்பொழிவு செய்திருக்கிறார்கள.
இவர்களும் சுற்றிலும் இருந்த உயர் சாதி மக்கள் என்றவர்களின் கொடுமைக்கு ஆளாகி விடுதலைத் தேடி கத்தோலிக்க கிறித்தவத்திற்கு மன மாற்றம் பெற்றாவர்கள். இவர்களது தொடக்க கால விசுவாசத்தை கட்டி காத்தவராக மைலாசபுரத்தை சேர்ந்த திரு. சவரிமுத்து ஆசிரியர் நினைவு கூறப்படுகிறார்.
அத்தணை கிளை பங்குத்தளங்களிலும் மிகச் சிறப்பாக எல்லா ஆன்மீக நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான ஞாயிறு வகுப்புகள், இளைஞர் பாசறை, கலைகள் கற்பித்தல், மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன.